கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருங்கள். சிலர், ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் தம்பதிகளுக்கு இடையில் அதிருப்தி ஏற்படலாம். சிறு சச்சரவு தோன்றும் போதே மவுனத்தைக் கடைப்பிடித்துவிடுங்கள். எந்த ஒரு காரியத்திலும் தயக்கம் இல்லாமல் முடிவெடுங்கள். அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடலாம்.