உழைப்பால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், கவனமுடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்கள், கடின முயற்சியுடன் செயல் படுவீர்கள். குடும்ப வாழ்க்கை சிறுசிறு குறைகளோடு நடைபெறும். யாருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்து வாருங்கள்.