அன்பும், அறிவுக்கூர்மையும் கொண்ட மகர ராசி அன்பர்களே!
புதன் மாலை 6.24 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திரஷ்டமம் உள்ளதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பல காரியங்களில் தீவிரமாக முயற்சி செய்தாலும், சிலவற்றிலேயே நீங்கள் எதிர்பார்க்கும் நலன்களை அடைய முடியும். தளர்வான காரியங்களில் வெற்றிபெற தகுந்த நபர்களின் உதவி தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகள் விருப்பப்படி நிறுத்தி வைத்த வேலையை உடனடியாக செய்வீர்கள். சொந்தத் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள், எந்த முடிவாக இருந்தாலும் கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவினாலும், சிறுசிறு பிரச்சினைகளும் அவ்வப்போது ஏற்படக்கூடும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற தீவிர முயற்சிகளில் ஈடுபடக்கூடும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாள் சன்னிதியில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.