4.8.2023 முதல் 10.8.2023 வரை
உழைப்பிற்கு அஞ்சாத மனம் படைத்த மகர ராசி அன்பர்களே!
செயல்கள் பலவற்றில் முயற்சியுடன் ஈடுபட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்க்கும் பண வரவுகள் திட்டமிட்டபடி வந்துசேரும். பணம் வரும் முன்பாகவே செலவுகள் காத்திருக்கும். சிலருக்கு ஆதாயம் அதிகமுள்ள புதிய வேலைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, பதவி உயர்வு ஏற்படலாம். தள்ளி வைத்த வேலையை உடனடியாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும். பண வரவு கணிசமாக இருக்கலாம். மூலப் பொருட்களை வாங்கி சேகரிப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு, தொழில் அபிவிருத்திக்குப் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு கடன் தொல்லை அகலும். கலைஞர்கள் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவர். பங்குச்சந்தை லாபகரமாக இயங்கும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.