மகரம் - வார பலன்கள்

Update:2023-07-28 01:11 IST

எடுத்த காரியத்தில் வெற்றியடையும் மகர ராசி அன்பர்களே!

காரியங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி, முன்னேற்றமான நிலை உண்டாகும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த காரியங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கடமைகளைக் கவனமுடன் செய்தாலும், உயரதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படாது. சகப் பணியாளர்கள் செயல்பாடு மனச்சஞ்சலத்தை உருவாக்கும். சொந்தத் தொழிலில் பணியாளர்களின் கவனக்குறைவு, வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்கலாம். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், கூட்டாளிகளின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மூலதனத்தை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை தரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் சுறுசுறுப்படைவார்கள். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்