மகரம் - வார பலன்கள்

Update:2023-07-14 01:30 IST

கலை ஆர்வத்துடன் காரியங்களை செய்யும் மகர ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை பகல் 11.10 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களை தள்ளிவைப்பது நல்லது. எதிர்கால வெற்றிகளுக்காக திட்டமிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திட்டமிட்டு பணியாற்று வதால் உழைப்பின் லாபத்தை அடைவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் பணியினை விரைவாகச் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பண வரவுகள் இருந்தாலும், செலவுகளும் தொல்லை தரலாம். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெறும். மூலதனத்தை அதிகரிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பம் நன்றாக நடைபெற்றாலும், சிறுசிறு பிரச்சினைகளும் தோன்றி மறையும். பெண்களின் ஆலோசனை தக்க நேரத்தில் கைகொடுக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் பணியாற்றுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

மேலும் செய்திகள்