மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை
வேகமும், விவேகமும் கொண்டு செயல்படும் கடக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 9-ல் குருபகவான் வீற்றிருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தடைப்பட்ட காரியங்கள் இனி தானாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் அதே நேரம் கண்டகச்சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே எவ்வளவுதான் பணம் வந்தாலும் சேமிக்க இயலாது.
புதன் வக்ர இயக்கம்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். 12-ம் இடத்திற்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது பயணங்கள் பலன் தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவிடும் சூழ்நிலை உருவாகும். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நல்லவிதமாக அமையும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அங்குள்ள சனியோடு சுக்ரன் சேருவதால் குடும்பத்தில் சில காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வரலாம். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். இதுவரை முடிவெடுக்க முடியாத சில பிரச்சினைகளுக்கு, நல்ல தீர்வு கிடைக்கும். தாய் வழி ஆதரவு உண்டு. ஆன்மிகப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
புதன் வக்ர நிவர்த்தி
தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், மார்கழி 24-ந் தேதி வக்ர நிவர்த்தியாவதால் விரய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே விரயங்கள் கூடும். அதனால் சுப காரியங்களுக்கு செலவு செய்து, சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் அதிகரிக்கும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெற மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் மார்கழி 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு.
செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பளம் உயர்ந்து சேமிப்பை அதிகரிக்கும் எண்ணங்கள் கைகூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பரவசப்படுத்தும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்குவதில் அக்கறை கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி விற் பனையால் லாபம் உண்டு. குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்காக எடுத்த முயற்சி கைகூடும்.
இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதன் மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 19, 20, 30, 31, ஜனவரி: 4, 5, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. அடிக்கடி மனக்குழப்பங்கள் உருவாகும். கூடுதல் விரயங்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஊர்மாற்றம் செய்யலாமா?, உத்தியோகத்தில் பணியிட மாற்றம் செய்யலாமா? என்று சிந்திப்பீர்கள். ெசாத்து விற்பனையால் வரும் ெதாகையைக் கொண்டு, தொழிலை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.