புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை
எதிலும் புதுமை படைக்க வேண்டுமென்று நினைக்கும் கடக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து கண்டகச் சனியாக உலா வருகிறார். ராசிநாதன் சந்திரனோடு கேது சஞ்சரித்து குருவால் பார்க்கப்படுகிறார். எனவே அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகார வர்க்கத்தினரின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அனுபவஸ்தர்களையோ, ஆன்மிகப் பெரியோர்களையோ, ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகவும் இருக்கிறது. சகாய ஸ்தானாதிபதி புதன், சகாய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது யோகம்தான். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் நன்மை கிடைக்கும். எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்துச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாய்தாக்கள் ஓயும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து கூட அழைப்புகள் வரலாம்.
துலாம் - செவ்வாய்
புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், சுக ஸ்தானத்திற்கு வருவதால் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். கடன்சுமை தீரப் புதிய வழிபிறக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்குஅதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். விரயாதிபதி 4-ல் சஞ்சரிக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். கல்யாண முயற்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் செலவிடுவீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழல் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பாசம்மிக்கவர்களின் நேசத்தால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். தாயின் உடல்நலம் சீராகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு பணிநீடிப்பும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கலைஞர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ- மாணவிகளுக்கு வெற்றிபெற முழு முயற்சி தேவை. பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதோடு பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 23, 24, 30, அக்டோபர்: 11, 12, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.