பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை ஒலிம்பிக்கில் இருந்து விலகல்

தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.

Update: 2024-06-28 05:08 GMT

கிங்ஸ்டவுன்,

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் வரும் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை எலைன் தாம்சன் ஹெரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். அவர் கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் அவருக்கு தசைநாரில் லேசான கிழிவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் விலகியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்