பாவோ நுர்மி விளையாட்டு போட்டி; தங்க பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

பின்லாந்தின் டோனி கெரானென் வெள்ளி பதக்கமும், அவருடைய சக நாட்டு வீரரான ஆலிவர் ஹெலாந்தர் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

Update: 2024-06-18 18:50 GMT

துர்கு,

பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் பாவோ நுர்மி விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில், இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, 85.97 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இந்திய ஆடவர் தேசிய சாதனையை (89.94 மீட்டர்) சோப்ரா படைத்துள்ள நிலையில், இந்த போட்டியில், 3-வது முயற்சியில் அவர், மற்றவர்களை விட அதிக தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெற்றி பெற்றுள்ளார்.

போட்டியில், பின்லாந்தின் டோனி கெரானென் வெள்ளி பதக்கம் (84.19 மீட்டர்) வென்றுள்ளார். அவருடைய சக நாட்டு வீரரான ஆலிவர் ஹெலாந்தர் (83.96 மீட்டர்) வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டில் அவருடைய 3-வது போட்டியில் விளையாடி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்