உலக செஸ் சாம்பியன்ஷிப்: இறுதி சுற்றும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிப்பது எவ்வாறு..?

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்று இன்று நடைபெற உள்ளது.

Update: 2024-12-12 05:49 GMT

image courtesy: PTI

சிங்கப்பூர்,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை 13 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

இதன் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்துள்ளன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள்.

இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடக்கிறது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடுகிறார்.

இறுதி சுற்றில் வெற்றி காணும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவார். இதுவும் டிராவில் முடிந்தால், அதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்க அதிவேகமாக காய்களை நகர்த்தும் சுற்று அடங்கிய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும்.

இதில் வெற்றி பெறுபவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்றவருக்கு ரூ. 1.67 கோடி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்