உலக செஸ் சாம்பியன்ஷிப்; குகேஷ்-லிரென் இடையிலான 13வது சுற்று ஆட்டம் 'டிரா'

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.;

Update:2024-12-11 20:25 IST

Image Courtesy: @FIDE_chess / X (Twitter)

சிங்கப்பூர்,

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியின் 13வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதன் காரணமாக இருவரும் தற்போது 6.5 புள்ளிகளுடன் சமனில் உள்ளனர். நாளை கடைசி சுற்று (14வது சுற்று) ஆட்டம் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் கடைசி சுற்று ஆட்டத்தில் யாராவது வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவார். ஒருவேளை நாளை நடைபெறும் கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தால் வரும் 13ம் தேதி டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும்.


Tags:    

மேலும் செய்திகள்