ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

படகு ஓட்டும் போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2023-09-19 10:32 GMT


Live Updates
2023-09-22 12:03 GMT

டேபிள் டென்னிஸ்: மகளிர் பிரிவில் இந்தியாவின்  அய்ஹிகா வெற்றி பெற்றார். சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில்  11-7, 11-8, 9-11, 11-5 என்ற செட் கணக்கில் அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றார்

2023-09-22 11:30 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகள்; டேபிள் டென்னிஸ் ஆடவர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார். சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற செட் கணக்கில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்று அசத்தினார். 

2023-09-22 09:52 GMT

படகு ஓட்டும் போட்டி: ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடந்த தகுதிச்சுற்றில் அவர் 7:22:22 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவதாக வந்தார்.

2023-09-22 09:39 GMT

வாலிபால் கிராஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி, சீன தைபே அணியை 3-0 என வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

2023-09-22 09:38 GMT

ஆசிய விளையாட்டு: பிரிலிமினரி சுற்றில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி 3-0 என ஏமன் அணியை வீழ்த்தியது.

2023-09-21 13:39 GMT

பெண்கள் கால்பந்து: இந்தியா - சீன தைபே அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா 1 கோல் அடித்தது. 47வது நிமிடத்தில் தமங் இந்த கோலை அடித்தார். இதன்மூலம் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து சீன தைபே அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தது. இதன்பிறகு இந்திய அணி எந்த ஒரு கோலையும் அடிக்கவில்லை. இதனால், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

2023-09-21 13:19 GMT

இந்திய கோல் கீப்பர்  சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சீன தைபே அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் சீன தைபே அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

2023-09-21 13:06 GMT

இந்தியா - சீன தைபே அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா 1 கோல் அடித்தது. 47வது நிமிடத்தில் தமங் இந்த கோலை அடித்தார். இதன்மூலம் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், சீனா தைபே அணி தற்போது ஒரு கோல் அடித்துள்ளது.

2023-09-21 12:36 GMT

பெண்கள் கால்பந்து: இந்தியா - சீன தைபே அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா 1 கோல் அடித்தது. 47வது நிமிடத்தில் தமங் இந்த கோலை அடித்தார். இதன்மூலம் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

2023-09-21 10:15 GMT

கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் முயற்சிகளை பரஸ்பரம் தடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணியின் சுனில் சேத்ரி (85வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினார். இதுவே வெற்றி கோலாக அமைந்தது. 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்