பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து...!

32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.

Update: 2023-08-06 04:41 GMT

Image Courtesy: @FIFAWWC

மெல்போர்ன்,

32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.

இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், நார்வே, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்களுக்கு முன்னேறின.

தொடரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி சுவிட்சர்லாந்தையும், ஜப்பான் அணி நார்வேயையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து இன்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டத்தில் நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்