ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகள் இன்று மோதல்..!

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது

Update: 2023-12-22 05:03 GMT

Image Courtesy: @IndSuperLeague

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஒடிசா அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது.

அதேவேளையில் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 2 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்