ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதின.

Update: 2022-12-16 17:14 GMT

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி சார்பில் லாலெங்மாவியா ஆட்டத்தின் 26 மற்றும் 59-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். மேலும், கிரெக் ஸ்டீவர்ட் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்