ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி கண்டுள்ளது.

Update: 2023-12-12 23:05 GMT

கோப்புப்படம்

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சி.யை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி கண்டுள்ளது. கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக டிரா கண்டுள்ள சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும். 9 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 டிரா, 4 தோல்வியை சந்தித்துள்ள பெங்களுரு அணி 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளது.

ஐ.எஸ்.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 3 ஆட்டங்களிலும், பெங்களூரு 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்