ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு, கோவா அணிகள் வெற்றி

பெங்களூருவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

Update: 2022-12-17 18:00 GMT

image courtesy: Indian Super League twitter

பெங்களூரு,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் டேனிஷ் பரூக் பட் ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கோவா எப்.சி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் கோவா அணி சார்பில் பெடியா ஆட்டத்தின் 10-வது நிமிடத்திலும் இகெர் ஆட்டத்தின் 20-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் ஜோர்தான் ஆட்டத்தின் 90+5 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்