மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவிற்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Update: 2022-07-04 08:24 GMT

பல்லேகல்லே,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இன்று பல்லேகல்லேயில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீராங்கணைகளான ஹாசினி பெரேரா, விஷ்மி குனரத்னே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணியை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி திணறியது. அவர்களால் போதிய அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை. அணியில் அதிகபட்சமாக எமா காஞ்சனா 47 ரன்கள் எடுத்தார். இறுதிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்