மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்... நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 64 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-09-20 07:18 GMT

Image Courtesy:@ICC

மேக்கே,

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மேக்கேவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேடி கிரீன் 35 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட், விலேமின்க், மோலினக்ஸ், சதர்லேண்ட், வேர்ஹாம், ஹீதர் கிரஹாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களம் புகுந்த ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 64 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் மோலி பென்போல்டு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்