மகளிர் ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2024-07-28 11:13 GMT

Image Courtesy : @ACCMedia1

தம்புல்லா,

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி களமிறங்கினர்.

இதில் ஷெபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா சேத்ரி 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்மிரிதி மந்தனா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஜெமீமா ரோட்ரிக்வெஸ் 29 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்