இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் - விராட் கோலி சாதனை

இன்ஸ்டாகிராமில் 20 கோடி "ஃபாலோ" -யர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

Update: 2022-06-08 12:56 GMT

Image Courtesy : AFP 

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வருபவர் விராட் கோலி. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக விளங்கி வருகிறார். இவரது தலைமையின் கீழ் டெஸ்ட் அரங்கில் இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டியுள்ளது.

இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 20 கோடி "ஃபாலோ" -யர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோலி, "20 மில்லியன், உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி உலகளவில் அதிக "ஃபாலோ" -யர்களை பெற்றுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோலி 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் போர்ச்சுகல் அணியின் கால்பந்து வீரர் ரொனால்டோ 45 கோடிக்கும் அதிகமான "ஃபாலோ" -யர்களை கொண்டுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்ஸி 33 கோடிக்கும் அதிகமான "ஃபாலோ" -யர்களை பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்