குஜராத்துக்கு எதிரான வெற்றி: டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.;
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் 6 வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த 17.3 ஓவர்களில் வெறும் 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 8.5 ஓவர்களிலேயே 92 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு விக்கெட் கீப்பிங்கில் 2 கேட்ச், 2 ஸ்டம்ப்பிங் செய்து அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆரம்பகட்ட தோல்விகளால் இழந்த ரன்ரேட்டை இப்போட்டியில் மீண்டும் பெற்றது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் தங்களின் அணி சாம்பியன் போல வெற்றி நடை போட துவங்கியுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"மகிழ்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. நாங்கள் சாம்பியன் அணியைபோல் செயல்படும் முறையைப் பற்றி பேசினோம். அதன் படி எங்களால் விளையாட முடியும் என்பதை இன்று எங்களுடைய அணி காண்பித்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பந்து வீச்சில் இது நிச்சயமாக எங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும். இன்னும் நாங்கள் முன்னேறுவோம் என்பதால் தொடரின் துவக்கத்திலேயே எதையும் அதிகம் சொல்ல முடியாது.
களத்திற்கு வருவதற்கு முன் இருந்த ஒரே சிந்தனை செயல்முறை சிறந்த வழியில் வருகிறது. காயத்திலிருந்து குணமடைந்த நேரங்களில் அது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. சேசிங்கில் முடிந்த வரை சீக்கிரம் வெல்வோம் என்பது பற்றி பேசினோம். அதனால் ஆரம்பத்தில் இழந்த ரன்ரேட்டை தற்போது பெற்றுள்ளோம். அகமதாபாத்தில் விளையாடுவதை விரும்புகிறோம். இங்கு அதிக போட்டிகளில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த வெற்றியில் இருந்து அனுபவித்து அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற விரும்புகிறோம்" என்று கூறினார்.