5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சியை அணிவதில் மிகவும் மகிழ்ச்சி - ஜடேஜா

மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-05 16:54 GMT

நாக்பூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ஜடேஜா காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை ., அவர் தனது முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளேன். நான் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன்.

இந்தப் பயணத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன், நீங்கள் 5 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லையென்றால் உங்களது மனநிலை எப்போது மீண்டும் அணிக்காக விளையாடப் போகிறோம் என்ற கவலையில் இருக்கும். நான் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக ஆர்வமாக காத்திருந்தேன்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கடினமாக உணர்ந்தேன்.மீண்டும் இந்திய ஜெர்சியினை அணிந்து விளையாட வேண்டும் என்ற உந்துதல் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்தது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்