நடுவர் முடிவுக்கு காத்திருக்காமல் தானாக வெளியேறிய ஜெய்ஸ்வால் - வைரல் வீடியோ

ஜெய்ஸ்வால் தானாகவே வெளியேறிதை கண்ட நடுவர் அதன் பிறகு அவுட் வழங்கினார்.

Update: 2022-05-25 11:01 GMT

Image Courtesy : Screengrab from Hotstar 

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் 3 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர்- யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 3 ரன்கள் எடுத்திருந்த போது குஜராத் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் வீசிய பந்து ஜெய்ஸ்வால் மட்டையில் லேசாக உரசியவாறு கீப்பர் சாஹா கையில் தஞ்சம் புகுந்தது.

இதனால் குஜராத் வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட நடுவர் அவுட் வழங்குவதற்கு முன்னதாகவே ஜெய்ஸ்வால் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஜெய்ஸ்வால் தானாகவே வெளியேறிதை கண்ட நடுவர் தனது கையை உயர்த்தி அவுட் வழங்கினார்.



நடுவரின் தீர்ப்புக்கு காத்திராமல் நேர்மையாக உடனே வெளியேறிய இளம் வீரர் ஜெய்ஸ்வாலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்