டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறும் 11-வது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2022-07-06 09:32 GMT

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று 3.15 மணிக்கு நடைபெறும் 11-வது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்