டிஎன்பிஎல் : இன்று 2 ஆட்டங்கள் : கோவை -திருப்பூர் , சேப்பாக் -திண்டுக்கல் அணிகள் மோதல்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது.

Update: 2022-07-16 03:39 GMT

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது.

இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன .

கோவை அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி,3 தோல்வி அடைந்த்துள்ளது.திருப்பூர் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி,2 தோல்வி அடைந்துள்ளது.

இன்று இரவு நடக்கும் மற்றோரு ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்