டிஎன்பிஎல்: கோவை அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

Update: 2022-07-12 13:34 GMT

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 17 ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்