டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: திருப்பூர் அணியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி

15.3ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து நெல்லை அணி வெற்றி பெற்றது

Update: 2022-07-10 12:54 GMT

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. அந்த வகையில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் நெல்லை -திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. திருப்பூர் அணியின் தொடக்க வீரர்கள் அரவிந்த் ரன் எதுவும் எடுக்காமலும் , சித்தார்த் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தன்னர்.பின்னர் வந்த சுப்ரமணியன் ஆனந்த் 15 ரன்களும் ,ரோகின்ஸ் 13ரன்களும் துஷார் ரஹேஜா 18 ரன்களும் எடுத்து பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

திருப்பூர் அணியில் மான் பாஃப்னா அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது நெல்லை அணியில் ஈஸ்வரன் 3 விக்கெட்டும் ,ஹரிஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.தொடர்ந்து 118 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி விளையாடியது தொடக்க வீரர் ஹரிஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.[பின்னர் சூர்ய பிரகாஷ் ,பாபா இந்திரஜித் இருவரும் இனைந்து அதிரடியாக விளையாடினர்.சூர்ய பிரகாஷ்28 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.மறுபுறம் சிறப்பாக விளையாடியாய பாபா இந்திரஜித் அரைசதம் அடித்தார்.

இறுதியில் 15 .3ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு  121 ரன்கள் எடுத்து நெல்லை அணி வெற்றி பெற்றது .பாபா இந்திரஜித்அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்