வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முதல் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.;

Update:2024-09-08 22:05 IST

 image courtesy: twitter/@BCCI

மும்பை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள்.

Tags:    

மேலும் செய்திகள்