வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; முன்னணி வீரருக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. திட்டம்? - வெளியான தகவல்

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.;

Update:2024-08-14 02:53 IST

Image Courtesy: @BCCI

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும் (சென்னை மற்றும் கான்பூர் மைதானங்களில்) அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவை முழுமையாக ஆடவைக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பும்ராவுக்கு வன்ங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்