இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : 4-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்ப்பு

வங்காளதேச அணி வெற்றி பெற இன்னும் 241 ரன்கள் தேவைப்படுகிறது

Update: 2022-12-17 11:07 GMT

சாட்டிங்காம்,

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இது டெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனால் முன்னிலை ரன்களுடன் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்சில் விளையாடிய 3-வது நாள் ஆட்ட இறுதியில் களமிறங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் ஆட்ட இறுதியில் 12 ஓவர் சந்தித்து விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்தது..

இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. வங்காளதேச அணி தொடர்நது சிறப்பாக விளையாடியது.நிலைத்து ஆடிய தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ,ஜாகிர் ஹசன் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 67 ரன்களில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வெளியேறினார்.பின்னர் வந்த யாசிர் அலி 5 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜாகிர் ஹசன் சதமடித்து அசத்தினார். பின்னர் அவர் 100 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களும் , நுருல் ஹசன் 3ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.4வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி சார்பில் அக்சார் படேல் 3 விக்கெட்டும் . உமேஷ் யாதவ் , அஸ்வின் , குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

வங்காளதேச அணி வெற்றி பெற இன்னும் 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். ஷாகிப் 40 ரன்களும் , மெஹிதி ஹசன் 9 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்