டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.;

Update:2024-06-04 21:48 IST

கோப்புப்படம் 

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.

அந்த வகையில் 2024 ஐ.பி.எல் தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தம்முடைய 11 பேர் கொண்ட இந்திய அணி பற்றிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து 3வது இடத்தில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட்டையும், 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும், வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

Tags:    

மேலும் செய்திகள்