டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை: ஹர்திக் பாண்ட்யா பின்னடைவு

புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது;

Update:2024-07-18 11:21 IST

துபாய்,

டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 2-வது இடம் வகித்த இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 4 இடம் சரிந்து 6-வது இடத்தை பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆடாததால் அவர் 6-வது இடத்தை பெற்றுள்ளார் இலங்கை வீரர் ஹசரங்கா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோனிஸ், ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா, வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ஆகியோர் தலா ஒரு இடம் உயர்ந்து முறையே 2 முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் தொடருகிறார். 3-வது இடத்தில் இருந்து பில் சால்ட் (இங்கிலாந்து) ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் பகிர்ந்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 6-வது இடத்தையும், சுப்மன் கில் 37-வது இடத்தையும் தனதாக்கி உள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் அடில் ரஷித் (இங்கிலாந்து), அன்ரிச் நோர்டியா (தென் ஆப்பிரிக்கா), ஹசரங்கா (இலங்கை) முறையே முதல் 3 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஜிம்பாப்வே தொடரில் விளையாடாத இந்திய வீரர் அக்சர் பட்டேல் 4 இடம் குறைந்து 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டாப்-10 இடங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை.      

Tags:    

மேலும் செய்திகள்