அயர்லாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 357 ரன்கள் குவிப்பு

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 357 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2023-04-26 19:25 GMT

image courtesy: Sri Lanka Cricket twitter

காலே,

இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 492 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பால் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பெர் சதம் அடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்து இருந்தது. நிஷன் மதுஷ்கா 41 ரன்னுடனும், கேப்டன் கருணாரத்னே 39 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடி 16-வது சதம் அடித்த கேப்டன் கருணாரத்னே 115 ரன்னில் (133 பந்து, 15 பவுண்டரி) கர்டிஸ் கேம்பெர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இலங்கை அணி 77 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றைய ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. முதல் சதம் அடித்த தொடக்க வீரர் நிஷன் மதுஷ்கா 149 ரன்களுடனும் (234 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்), குசல் மென்டிஸ் 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்