எஸ்.ஏ 20 ஓவர் லீக்; வான் டெர் டுசென் அதிரடி சதம்...சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற எம்.ஐ.கேப்டவுன்..!
6 அணிகள் கலந்து கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது.;
ஜோகன்ஸ்பர்க்,
6 அணிகள் கலந்து கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் மோதின. இதில் கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வான் டெர் டுசென் மற்றும் ரிக்கெல்டன் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் வான் டெர் டுசென் சதம் அடித்து அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கேப்டவுன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் வான் டெர் டுசென் 104 ரன்னும், ரிக்கெல்டன் 98 ரன்னும் குவித்தனர். இதையடுத்து 244 ரன் என்ற கடினமான இலக்குடன் சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.
கேப்டவுன் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 98 ரன் வித்தியாசத்தில் கேப்டவுன் அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.