இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-30 14:51 GMT

Image Courtesy : AFP

மும்பை,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா-இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி விவரம்:-

சரித் அசலங்கா(கேப்டன்), பதுன் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, காமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநகே, நிஷான் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லகலே, சமிகா கருணாரத்னே, மகேஷ் தீக்ஷனா, அகிலா தனஞ்ஜெயா, தில்ஷான் மதுஷன்கா, மதீஷனா பதிரனா மற்றும் அசிதா பெர்னாண்டோ

Tags:    

மேலும் செய்திகள்