ஜெய்ஸ்வால், ராகுல் இல்லை.. விராட் மற்றும் ரோகித் இடத்தை அந்த வீரர்கள் நிரப்புவார்கள் - சாவ்லா

ரோகித் மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தனர்.;

Update:2024-09-13 19:56 IST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வருங்காலங்களில் ரோகித் மற்றும் விராட் கோலி இடத்தை சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிரப்பும் திறமையைக் கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில் நல்ல டெக்னிக் கொண்டுள்ளார். ஒரு பேட்ஸ்மேன் சுமாரான பார்முக்குள் செல்லும்போது வலுவான டெக்னிக்கை கொண்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வந்து விட முடியும். எனவே நல்ல டெக்னிக்கை கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்கள் நீண்ட காலம் பார்ம் அவுட்டாக இருக்க முடியாது. எனவே சுப்மன் கில் கண்டிப்பாக அவர்களில் ஒரு இடத்தை நிரப்புவார்.

அதேபோல ருதுராஜ் கெய்க்வாட் தற்போது காயங்களால் தடுமாறுவது விளையாட்டின் ஒரு அங்கமாகும். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் வித்தியாசமான வீரராக செயல்பட்டுள்ளார். எனவே அந்த 2 வீரர்களும் ஸ்பெஷலாக எனக்குத் தோன்றுகிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்