தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார் மார்க் பவுச்சர்
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை முடிவடைந்தவுடன் மார்க் பவுச்சர் தென் ஆப்பிரிக்க அணி தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார்;
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான பவுச்சர் டிசம்பர் 2019 முதல் பயிற்சியாளர் பதவியை வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை முடிவடைந்தவுடன் மார்க் பவுச்சர் தென் ஆப்பிரிக்க அணி தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார். அவர் தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக ராஜினாமா செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
பவுச்சரின் விலகல் குறித்து தென் ஆப்பிரிக்கா தலைமை நிர்வாக அதிகாரி ஃபோலெட்சி மொசெகி பேசியதாவது:-
கடந்த மூன்று ஆண்டுகளாக தென் ஆப்பரிக்க அணியின் கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செலவு செய்த நேரம் மற்றும் முயற்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அவர் செய்த பணிக்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவரது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். மார்க் பவுச்சர் எங்களைவிட்டு பிரிவது வருத்தமாக உள்ளது. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மார்க் ஒரு ஜாம்பவான். இவ்வாறு அவர் கூறினார்.