ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; அமெரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி..!

15-வது ஜூனியர் உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது.

Update: 2024-01-19 13:25 GMT

Image Courtesy: @ICC

புளோம்பாண்டீன்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது.

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி அயர்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

40.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அமெரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் குஷ் பாலாலா அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்