ஐ.பி.எல்.: மும்பை அணியை விட்டு ரோகித் செல்ல மாட்டார் - இந்திய முன்னாள் வீரர்

மும்பை அணியை விட்டு ரோகித் சர்மா செல்ல மாட்டார் என்று நம்புவதாக பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-13 13:46 GMT

image courtesy: AFP

மும்பை,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா இந்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வாங்க பஞ்சாப், டெல்லி, லக்னோ, பெங்களூரு போன்ற அணிகள் தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் மும்பை அணியை விட்டு ரோகித் சர்மா செல்ல மாட்டார் என்று நம்புவதாக இந்திய முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு வீரராகவும் கேப்டனாகவும் வளர உதவிய மும்பையை விட்டு ரோகித் செல்ல மாட்டார் என்று ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "எனக்குத் தெரிந்த வரை ரோகித் சர்மா மும்பை அணியின் முக்கிய அங்கமாகவே இருக்கிறார். மும்பை அணியிலிருந்து வெளியேறுவது ரோகித் சர்மாவுக்கு எளிதாக இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ரோகித் சர்மாவுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். ஒருவேளை ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறினால் அது உணர்வுபூர்வமாகவும் எளிதற்றதாகவும் இருக்கும். தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மா மும்பைக்கு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் மும்பை அணியில்தான் இன்று இருக்கும் கேப்டனாகவும் வீரராகவும் ரோகித் சர்மா வளர்ந்தார். எனவே அவர் அங்கேயே இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அங்கிருந்து நகர்ந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்