ஐ.பி.எல். 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்த விராட் கோலி

லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய ஒரு நாளிலேயே விராட் கோலி ஆர்.சி.பி. அணியுடன் இணைந்துள்ளார்.

Update: 2024-03-18 13:19 GMT

image courtesy: twitter/@RCBTweets

பெங்களூரு,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்..

இதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆர்.சி.பி. அணியுடன் இணையாமல் இருந்தார். கடந்த ஜனவரி மாதம் லண்டன் சென்ற விராட் கோலி குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனையடுத்து விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து நேற்று மும்பை திரும்பினார். இந்நிலையில் இந்தியா திரும்பிய ஒரு நாளிலேயே அவர் ஆர்.சி.பி. அணியுடன் இணைந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்