கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஐ.பி.எல். மினி ஏலம் தேதி மாற்றப்படுமா?

ஐ.பி.எல். 2023 சீசனுக்கு மினி ஏலம் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Update: 2022-11-23 18:31 GMT

Image courtesy: twitter BCCI 

மும்பை,

ஐ.பி.எல். 2023 சீசனுக்கு மினி ஏலம் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 15-ந்தேதிக்குள் விடுவிக்கப்படும், தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன்படி 10 அணிகளும் பட்டியலை வழங்கிவிட்டன. பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு பயிற்சியாளர், ஆலோசகர்கள் மற்றும் பிற நிர்வாகிகளை கொண்டுள்ளன. அவர்கள் மினி ஏலத்தில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஏலம் நடைபெற இருப்பதால் அவர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.

இதனால் பெரும்பாலான அணி நிர்வாகம், மினி ஏலத்திற்கான தேதியை மாற்றம் செய்யும்படி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பி.சி.சி.ஐ. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

ஏலத்தை பொறுத்தவரை வீரர்களை வாங்குவதற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் இன்னும் 42.25 கோடி ரூபாய், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 32.20 கோடி ரூபாய், லக்னோவிடம் 23.35 கோடி ரூபாய், மும்பையிடம் 20.55 கோடி ரூபாய், சென்னையிடம் 20.45 கோடி ரூபாய், டெல்லியிடம் 19.45 கோடி ரூபாய், குஜராத்திடம் 19.25 கோடி ரூபாய், ராஜஸ்தானிடம் 13.20 கோடி ரூபாய், பெங்களூரிடம் 8.75 கோடி ரூபாய், கொல்கத்தாவிடம் 7.05 கோடி ரூபாயும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்