இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு; தேர்வாளர்களை விமர்சித்த சசி தரூர்

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Update: 2024-07-19 06:05 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடிக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வை காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்த மாத இறுதியில் இலங்கைக்கு செல்லும் இந்திய அணியின் தேர்வு ஆச்சரியமாக உள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு அணியில் இடமே இல்லை.

சில வீரர்கள் சிறப்பாக செய்தாலும் அது தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. அணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்