விக்கெட் வீழ்த்தியதை பிரபல கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட்போல கொண்டாடிய பும்ரா!
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
புது டெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.
விக்கெட் வீழ்த்தியதும் மகிழ்ச்சியடைந்த பும்ரா அதனை பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட்போல கொண்டாடினார்.
தொடக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 24 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.