நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்..! கோலாகலமாக நடைபெற்ற திருமணம்...!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது
குஜராத்,
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது.அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் போது அக்ஷர் படேல் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.