இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருது இவருக்குத்தான் - இந்திய முன்னாள் வீரர் கருத்து

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள்,5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

Update: 2023-07-26 05:30 GMT

Image Courtesy: AFP

டிரிடினாட்,

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2வது போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் மழை காரணமாக 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடைபெறாததால் ஆட்டம் டிரா ஆனது.

அந்த 2வது போட்டியில் முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான வெற்றிகோப்பையும், காசோலையும் வழங்கப்பட்டது. ஆனால் தொடர்நாயகன் விருது வழங்கப்படவில்லை .

இந்நிலையில் என்னை பொறுத்தவரை இந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருது அஷ்வினுக்கு தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஹீர் கான் கூறுகையில்,

இந்த தொடரின் போது முதல் டெஸ்டில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் மொத்தமாக 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதோடு பந்துவீச்சில் மட்டுமின்றி விராட் கோலி, ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு இணையாக அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் முக்கியமான அரைசதம் ஒன்றையும் அடித்துள்ளார்.

இதனால் என்னை பொறுத்தவரை இந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருது அஷ்வினுக்கு தான்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்