உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன்காடன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் 27.1 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 83 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்தியா அணியின் ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குல்தீப் பந்து வீச்சில் லுங்கி இங்கிடி ரன் எதுவும் எடுக்காமல் (0) போல்ட் முறையில் அவுட் ஆனார்.
9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
ரபாடா 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 26.2 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 248 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 1 விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.
8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
யான்சன் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 25.4 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 248 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 2 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
25 ஓவர்கள் முடிவு
25 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ரபாடா 5 ரன்களுடனும், யான்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 25 ஓவர்களில் 249 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற 3 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
20 ஓவர்கள் முடிவு
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. ரபாடா 2 ரன்களுடனும், யான்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 30 ஓவர்களில் 258 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற 3 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
கேசவ் மகராஜ் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 18.4 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 260 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 3 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
டேவிட் மில்லர் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 16.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 268 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
15 ஓவர்கள் முடிவு
தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ஜேசன் 2 ரன்களுடனும், டேவிட் மில்லர் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 35 ஓவர்களில் 275 ரன்கள் தேவைப்படுகிறது.
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
வான் டெர் டஸன் 13 ரன் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 13.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னும் 287 ரன்கள் தேவைப்படுகிறது.