மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
நவிமும்பை,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.
டி20 போட்டிகள் அனைத்தும் நவி மும்பையிலும், ஒருநாள் போட்டிகள் அனைத்தும் வதோதராவிலும் நடைபெற உள்ளன. இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் அணிகளுக்கு (ஒருநாள் மற்றும் டி20 அணி) ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்த இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது.
அதேவேளையில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.