வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; பாகிஸ்தானின் ஆடும் லெவன் அறிவிப்பு

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தானின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-19 15:56 GMT

image courtesy; ICC

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இதனால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவ வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடருக்கான வங்காளதேச அணி ஷாண்டோ தலைமையிலும், பாகிஸ்தான் அணி ஷான் மசூத் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான பாகிஸ்தானின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சவுத் சகீல் துணை கேப்டனாகவும், முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளனர்.

பாகிஸ்தானின் ஆடும் லெவன்; அப்துல்லா ஷாபீக், சைம் அயூப், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சவுத் சகீல் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆஹா, ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, குர்ரம் ஷஷாத், முகமது அலி. 

Tags:    

மேலும் செய்திகள்